மத்தியப் பிரதேசத்தின் புர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள காக்னார் சமூக சுகாதார மையத்தில் அரங்கேறிய கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக் கூடத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் சடலத்தை, 25 வயதான நிலேஷ் பிலாலா என்ற இளைஞன் யாரும் இல்லாத நேரத்தில் திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து, தரதரவென இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இந்த கொடூர செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், சடலம் தரையில் கிடப்பதைக் கண்ட மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, டாங்கியாபாட் கிராமத்தைச் சேர்ந்த நிலேஷ் பிலாலாவைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம், அரசு மருத்துவமனைகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள பாதுகாப்புப் பற்றாக்குறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும், சடலங்கள் மீதான பாலியல் ஈர்ப்பான ‘நெக்ரோபிலியா’ என்ற இந்த உளவியல் கோளாறுக்கான தனிப்பட்ட தண்டனைகள் இந்தியாவின் தற்போதைய சட்ட கட்டமைப்பில் இல்லாததால், சட்ட இடைவெளியை நீக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
Read More : தீபாவளிக்கு எண்ணெய் குளியல்..!! எவ்வளவு அவசியம் தெரியுமா..? கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க..!!



