இன்ஸ்டாகிராம் பயனர்களே.. இதை செய்யாவிட்டால் உங்கள் ஃபோன் பேட்டரிக்கு ஆபத்து..!! எச்சரிக்கும் கூகுள்..

instagram update 1

கடந்த சில நாட்களாக ஸ்மார்ட்போன் பயனர்கள் இன்ஸ்டாகிராமால் பேட்டரி சீக்கிரம் காலியாவதாக குற்றசாட்டை முன் வைத்துள்ளனர். இதன் பின்னணியில் செயலில் இல்லாதபோதும் இன்ஸ்டா பேட்டரியை பயன்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. பயனர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்த நிலையில், கூகுள் நிறுவனம் இன்ஸ்டாகிராம் பேட்டரி சிக்கலை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது.


உடனடியாக, இந்த பிரச்சனையை சரிசெய்யும் விதமாக, இன்ஸ்டாகிராம் செயலிக்கான ஒரு புதிய அப்டேட்டை மே 28, அன்று வெளியிட்டது. பேட்டரி சீக்கிரம் காலியாகாமல் இருக்க, Google Play Store-க்குச் சென்று இன்ஸ்டாகிராம் பில்ட் 382.0.0.49.84 ஐ நிறுவவும் என்றும் பயனர்களுக்கு அறிவுறுத்துகிறது. இருப்பினும், இன்ஸ்டாகிராம் ஏன் திடீரென பேட்டரி பிரச்னை ஏற்படுத்துகிறது என்று கூகுளோ அல்லது இன்ஸ்டாகிராமோ தெளிவுபடுத்தவில்லை.

பேட்டரி குறைபாட்டை சரிசெய்ய, பழைய அப்டேட்டில் சில பயனர்கள், தங்கள் ஸ்மார்ட்போன்கள் சூடாகியதாகக் கூறினர். தற்காலிகமாக இன்ஸ்டாகிராம் லைட்டிற்கு மாறியதாகவும், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டால்தான் பிரச்னை ஏற்பட்டது என்பதையும் பயனர்கள் உறுதிப்படுத்தினர்.

பேட்டரி குறைபாடு பிரச்னையால் எந்தெந்த ஸ்மார்ட்ஃபோன்கள் அல்லது ஆண்ட்ராய்டு பாதிக்கப்பட்டன என்பதை Google குறிப்பிடவில்லை என்றாலும், மே மாத அப்டேட்டைப் பெற்ற அனைத்து Pixel சாதனங்களும் இந்தப் பிரசனையால் பாதிக்கப்பட்டன என்று கூறியது.

Read more: இனி இந்த ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது.. எந்தெந்த மாடல் தெரியுமா..?

Next Post

இன்று உலக சைக்கிள் தினம்!. தினமும் 30 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு எத்தனை நன்மைகள் தெரியுமா?

Tue Jun 3 , 2025
சைக்கிளை எல்லோரும் நிச்சயமாக பயன்படுத்தியிருப்போம். ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக சைக்கிள் விளங்கியது. ஆனால் இன்று இதை பெரும்பாலும் உடற்பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தும் நிலை வந்துள்ளது. அதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் குறைந்து ஒரு சைக்கிள் ஆவது இருக்கும். காலப்போக்கில் இரண்டு சக்கர மேட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லச் செல்ல வீட்டுக்கு இரண்டு மேட்டார் வாகனங்கள் என்ற நிலை […]
World Bicycle Day 11zon

You May Like