இனி 90 நொடிகளில் உங்கள் புகைப்படம் கையில் இருக்கும்..!! இவ்வளவு குறைந்த விலையில் அசத்தல் கேமரா..!!

புகைப்படம் எடுத்த 90 நொடிகளில் அதை பிரிண்ட்டாக பெறக்கூடிய அம்சம் கொண்ட அசத்தல் கேமராவை ஃபியூஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


இப்போதெல்லாம் நம் கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் அசத்தலான தரத்துடன் கேமராக்களை கொண்டுள்ளன. அவற்றில் நமக்கு பிடித்தமான எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும், அவற்றை பிரிண்ட் போட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் நமக்கு பலமுறை தோன்றும். ஆனால், இதற்காக மெனக்கெட மனமில்லாமல் அப்படியே கிடப்பில் போட்டு விடுவோம். ஆனால், நாம் ஒரு புகைப்படம் எடுத்த 90 நொடிகளில் அந்த புகைப்படம் நம் கையில் இருந்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கேமராவைத்தான் பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான ஃபியூஜி அறிமுகம் செய்திருக்கிறது.

பட்ஜெட் விலையில், அசத்தலான அம்சங்களுடன் கூடிய பியூஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் ஸ்குவேர் எஸ்கியூ 40 கேமரா தான் அது. இந்த கேமராவில் கிளிக் செய்தால் 90 நொடிகளில், உங்களது கையில் போட்டோ இருக்கும். பிரிண்டர் பக்கமே போக வேண்டியதில்லை. இந்த கேமரா பேட்டரியில் செயல்படக்கூடியது என்பதால், சார்ஜிங் பிரச்சனை இருக்காது. எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

இந்த இன்ஸ்டன்ட் கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் 62 மிமீ × 62 மிமீ அளவில் இருக்கும். இந்த கேமரா ரிவர்ஸ் கலிலியன் வியூஃபைண்டர் (Reverse Galilean Viewfinder) கொண்டுள்ளது. அதோடு 0.4× டார்கெட் ஸ்பாட்-ம் உள்ளது. சூட்டிங் ரேன்ஞ் 0.3 மீட்டர் ஆகும்.
செல்பீ மோடில் 0.3 முதல் 0.5 மீட்டர் வரையில் புகைப்படங்கள் எடுக்கலாம். 1/2 முதல் 1/400 செகண்ட்ஸ் ஸ்பிடூ கொண்ட புரோகிராம்ட் எலக்ட்ரானிக் ஷட்டர் உள்ளது.

அதோடு லோ லைட் சிங்க்ரோ அம்சமும் இந்த கேமராவில் இருக்கிறது. ஆட்டோமேட்டிக் எக்ஸ்போஷர் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஃபிலிம் எஜெக்ஷன் உள்ளிட்ட வசதிகளும் இந்த கேமராவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் கிளிக் செய்யப்படும் போட்டோக்கள் 90 நொடிகளில் பிரிண்ட்டாகி வெளியே வந்துவிடும். இரவில் போட்டோக்களை எடுக்கும் வகையில் பிளாஷ் லைட் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராவில் 2 லித்தியம் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் கேமராவை ஆன் செய்துவிட்டு, 5 நிமிடங்கள் எந்த போட்டோவையும் எடுக்கவில்லை என்றால், ஆட்டோமேட்டிக்காக அது ஆஃப் ஆகிவிடும். இதன் மொத்த எடை 453 கிராம். இந்த பியூஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் ஸ்குவேர் எஸ்கியூ 40 இன்ஸ்டன்ட் கேமராவின் விலை ரூ.16,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் மிகவும் தரமான இன்ஸ்டண்ட் கேமரா இது என்றால் மிகையில்லை.

CHELLA

Next Post

தகுதி சுற்றில் தோல்வி!... ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்!...

Sun Jul 2 , 2023
தகுதிச்சுற்றில் தோல்வியடைந்ததையடுத்து நடப்பாண்டிற்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.இதில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து சிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் , ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சுப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. […]
WestIndies

You May Like