புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நத்தமாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரி (25). திண்டுக்கல்லில் உள்ள ஒட்டுப்பட்டி கெயின் ஆப் இண்டஸ்ட்ரியல் என்ற சாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த மூன்று வருடங்களாக பணியாற்றி வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் லிப்டிங் ஆபரேட்டராக பணியாற்றி வந்த ஹர்தீப் குமார் என்பவருடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
ஹர்தீப் குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த விஷயத்தை மறைத்து பரமேஸ்வரியிடம் தன்னுடைய குடும்பம் வசதியான குடும்பம் எனவும் தன்னை திருமணம் செய்து கொண்டால் எந்த பிரச்சனையும் வராது என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார். இதனை நம்பிய பரமேஸ்வரி அவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
அப்போது அந்த நபர், எங்கள் வீட்டில் பிரச்சனை அதிகமாக உள்ளதால் நீ கர்ப்பிணி ஆனால் மட்டுமே எங்கள் வீட்டில் ஏதாவது சண்டை போட்டுவிட்டு உன்னை எங்கள் குடும்பத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என கூறி தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார். பிறகு பரமேஸ்வரி கர்ப்பமான நிலையில் ஹர்திக் குமார் அவரை பல காரணங்களை கூறி திருமணம் செய்து கொள்ளாமலும் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமலும் இருந்துள்ளார்.
இதனால் பரமேஸ்வரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருதரப்பையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அந்த பெண் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் தான் தந்தை என்றும், இரண்டு மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் எழுதிக் கொடுத்து அங்கிருந்து ஹர்திக் குமார் சென்று உள்ளார். பிறகு இரண்டு வருடங்கள் ஆகியும் அவர் இதுவரை பரமேஸ்வரியை தொடர்பு கொள்ளவில்லை. இந்த நிலையில், குழந்தையை பெற்றெடுத்த பரமேஸ்வரி காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மீண்டும் போலீசில் புகார் அளித்தார்.
Read more: மதுரை AIIMS மருத்துவமனையில் வேலை.. கை நிறைய சம்பளம்..! தகுதி இதுதான்.. உடனே விண்ணப்பிங்க..