செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, ஒரு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த முகாம் வரும் செப்.27ஆம் தேதியான சனிக்கிழமை அன்று, பையனூரில் உள்ள ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றன.
இதன் மூலம், சுமார் 5000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்களும், பி.இ, ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற தொழில்நுட்பப் படிப்பு முடித்தவர்களும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி வேலை தேடும் இளைஞர்களும் இதில் பங்கேற்று வேலைவாய்ப்பைப் பெறலாம். 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். வேலை தேடும் இளைஞர்கள், தங்கள் கல்விச் சான்றிதழ் நகல்கள், சுயவிவரக் குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், 2025 செப்.27ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, திருப்போரூர் தாலுகா, பழைய மாமல்லபுரம் சாலை, பையனூரில் அமைந்துள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேரடியாக கலந்துகொள்ளலாம்.
இந்த முகாமில் வேலை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முகாம் தொடர்பான கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, 044-27426020, 9486870577, 9384499848 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம். இந்த முகாமில் கலந்துகொள்ள, வேலை தேடுபவர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, மாநிலம் முழுவதும் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
Read More : “மாமா என்னை மன்னிச்சிருங்க”..!! அத்தையுடன் உல்லாசமாக இருந்த மருமகன்..!! போலீஸ் ஸ்டேஷனில் வைத்தே சம்பவம்..!!