நீதிமன்ற தீர்ப்பு, அரசின் திட்டங்கள் குறித்து உருட்டிய யூடியூப் சேனல்கள்..!! மத்திய அரசு கடும் எச்சரிக்கை..!!

இந்தியாவில் 3 யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மைத் தன்மை கண்டறியும் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூஸ் ஹெட்லைன்ஸ், சர்காரி அப்டேட், ஆஜ் தக் லைவ் ஆகிய இந்த 3 யூடியூப் சேனல்களும், உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அரசின் திட்டங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்டவை குறித்துப் பொய் செய்திகளை வெளியிட்டுள்ளன.

நீதிமன்ற தீர்ப்பு, அரசின் திட்டங்கள் குறித்து உருட்டிய யூடியூப் சேனல்கள்..!! மத்திய அரசு கடும் எச்சரிக்கை..!!

வாக்குச்சீட்டுகள் மூலம் எதிர்வரும் தேர்தல்கள் நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு, ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு வைத்திருப்போருக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு தடை போன்ற தவறான செய்திகள் இந்த யூடியூப் சேனல்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இந்த யூடியூப் சேனல்கள் தங்கள் வீடியோக்களில் விளம்பரங்களைக் காட்டுவதும், தவறான தகவல்களைப் பணமாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு, அரசின் திட்டங்கள் குறித்து உருட்டிய யூடியூப் சேனல்கள்..!! மத்திய அரசு கடும் எச்சரிக்கை..!!

இந்த 3 சேனல்களும் 33 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்டிருப்பதும், அவர்கள் 30 கோடிக்கும் அதிகமான முறை இந்த தவறானத் தகவல்களைப் பார்த்திருப்பதும் தெரியவந்துள்ளது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சத்தின் சார்பில் கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளன”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை!!! தலிபான்கள் அதிரடி உத்தரவு!!

Wed Dec 21 , 2022
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி ஓர் ஆண்டுக்கு மேல் ஆகும் நிலையில், அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படும், புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படும். வேறு ஆண்களுடன் பொது இடத்தில் பெண்கள் பேசக்கூடாது. அலுவலக பணிக்கு பெண்கள் செல்லக்கூடாது, போன்ற பல கட்டுப்பாடுகளாள் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், கடந்த மார்ச் […]
afghanistan women1

You May Like