YouTube TV மற்றும் Disney இடையிலான உரிம ஒப்பந்தம் முறிந்ததால், Google சேவையில் இருந்து Disney-யின் அனைத்து பிரபலமான சேனல்கள் நீக்கப்படுகின்றன.. இதனால் அமெரிக்காவில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்படவுள்ளனர். Disney-க்கு சொந்தமான அனைத்து சேனல்களும், அதில் ESPN மற்றும் ABC உட்பட, Google தளத்திலிருந்து நீக்கப்பட உள்ளன என்று YouTube TV அறிவித்துள்ளது.. மேலும் “YouTube TV-யின் Disney உடனான ஒப்பந்தம் காலாவதியானது. எங்கள் பயனாளர்களுக்கு பாதகம் ஏற்படும் விதமாகவும், Disney-க்கு நன்மை ஏற்படும் விதமாகவும் உள்ள நிபந்தனைகளை நாம் ஏற்க முடியாது,” என்று YouTube TV தெரிவித்துள்ளது.
Google நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ Disney சேனல்கள் அமெரிக்க நேரம் இரவு 12 மணிக்கே நீக்கப்படும். அவை நீண்ட காலம் வரை கிடைக்காதபட்சத்தில், YouTube TV அதன் சந்தாதாரர்களுக்கு ஒருமுறை $20 (சுமார் ₹1,700) நிவாரணமாக வழங்கும். தற்போது YouTube TV-யின் அடிப்படை சந்தா $82.99 மாதம் ஆகும்.
YouTube TV-யிலிருந்து நீக்கப்படும் Disney சேனல்கள்:
ஆங்கில சேனல்கள்:
ABC, ESPN, ESPN2, ESPNU, ESPNews, Freeform, FX, FXX, FXM, Disney Channel, Disney Junior, Disney XD, SEC Network, Nat Geo, Nat Geo Wild, ABC News Live, ACC Network, Localish.
ஸ்பானிஷ் சேனல்கள்:
ESPN Deportes, Baby TV Español, Nat Geo Mundo.
YouTube TV vs Disney
YouTube TV என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய pay-TV வழங்குநர்களில் ஒன்றாகும்.. இந்நிறுவனம் இந்த வருடம் பல பாரம்பரிய மீடியா நிறுவனங்களுடன் கடினமான ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக Google, NBCUniversal (Comcast நிறுவனத்தின் சொத்து) உடனும் ஒப்பந்தம் செய்து NBC நிகழ்ச்சிகள் (‘Sunday Night Football’, America’s Got Talent போன்றவை) YouTube TV-யில் தொடர அனுமதித்தது. அதேபோல் Fox மற்றும் Paramount நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Disney செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து பேசிய போது “ $3 டிரில்லியன் சந்தை மதிப்புள்ள Google, தனது ஆதிக்கத்தை பயன்படுத்தி போட்டிகளை அழிக்கிறது மற்றும் தொழில் தரநிலைக்கு ஒப்பாத நிபந்தனைகளை திணிக்கிறது. மற்ற அனைத்து விநியோகஸ்தர்களுடனும் நாங்கள் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.”
மாறாக, Disney கடந்த வாரம் YouTube TV-யுடன் ஒப்பந்தம் முறிவடையும் அபாயத்தை குறித்து தன் பார்வையாளர்களுக்கு எச்சரிக்கை செய்திருந்தது.
YouTube TV அளித்த பதிலில் “ Disney, ஒப்பந்த அழுத்தம் கொடுக்க YouTube TV-யில் blackout மிரட்டலை பயன்படுத்தியது. இப்போது அவர்கள் அதனை நிறைவேற்றி, தங்கள் உள்ளடக்கத்தை YouTube TV-யில் இருந்து தடை செய்துள்ளனர். இதனால் எங்கள் சந்தாதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.. ஆனால் Disney-யின் சொந்த live TV சேவைகள் — Hulu + Live TV, Fubo போன்றவை பயன் பெறுகின்றன.” என்று தெரிவித்திருந்தது.
இந்த ஒப்பந்தத் தோல்வி அமெரிக்காவில் மில்லியன் கணக்கான YouTube TV பயனாளர்களுக்கு பெரிய சவாலாகும்.. குறிப்பாக ESPN, ABC, மற்றும் Disney Channel போன்ற பிரபலமான சேனல்களைப் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
Read More : முழுக்க முழுக்க 22 கேரட் தங்கம்.. உலகின் மிக விலையுயர்ந்த ரயில்; டிக்கெட்டின் விலை இத்தனை லட்சமா?



