கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதற்காக, யூடியூபர் மாரிதாஸ் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கரூரில் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கி உள்ளது.. இதுகுறித்து ஒரு நபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. இதுதொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர், மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.. மேலும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்து விட்டது.
எனினும் புஸ்ஸி ஆனந்த் கடந்த 7 நாட்களாக தலைமறைவாகி உள்ளதால் அவரை தனிப்படை அமைத்து தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.. இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் அவதூறு கருத்து பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்திருந்தனர்.. அதன்படி சுமார் 25 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.. இதன் தொடர்ச்சியாக பிரபல யூடியூபர் ஜெரால்டு ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்டார்..
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், தமிழக அரசுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டதற்காக, மதுரையை சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.. உண்மைக்கு புறம்பான தகவலை பரப்பியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
Read More : அதிமுக பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. அதிர்ச்சியில் இபிஎஸ்..!