எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சூழலில் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறு நாள் முதல் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிகரிக்கப்பட்டுள்ளது..
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. சென்னை கிரீன்வே சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கும், சேலத்தில் உள்ள அவரின் வீட்டிற்கும் இதுவரை சுமார் 4 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பை இசட் பிளஸ் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : சொல்லொணாப் பெருந்துயர்.. பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..