பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து கழிந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தின் சக்வால் மாவட்டத்தில் உள்ள பால்கசார் அருகே, இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு எம்-2 மோட்டார் பாதையில் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதிகாரிகள் கூறுகையில், பேருந்தின் டயர் வெடித்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, வாகனம் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது. எட்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்தவர்களில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நான்கு குழந்தைகள் அடங்குவர். காயமடைந்தவர்கள் அனைவரும் சக்வாலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்து குறித்து பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் வருத்தம் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பாகிஸ்தானில் சாலை விபத்துகள் சர்வசாதாரணமாக நிகழ்கின்றன, மேலும் அவை பெரும்பாலும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மோசமான சாலை நிலைமைகளால் ஏற்படுகின்றன.
Read more: உடற்பயிற்சி மட்டும் போதாது.. இயற்கையாக உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளின் லிஸ்ட் இதோ..!!