மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள். நிதியாண்டு 2023-24 இல் இந்த எண்ணிக்கை 79.39 லட்சமாகவும், நிதியாண்டு 2022-23 இல் 75.79 லட்சமாகவும் இருந்தது.இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவித்த நிதி மற்றும் கடந்த மூன்று நிதியாண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசால் விடுவிக்கப்பட்ட தொகை 2022-23 ரூ. 9743.53 கோடி, 2023-24 ரூ. 12616.53 கோடி, 2024-25 ரூ . 7585.49 கோடி ஆகும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட ஊழியர்களின் திறன் தளத்தை மேம்படுத்துவதற்காக, இந்திய அரசு டிசம்பர் 2019 இல் “உன்னதி திட்டத்தை” (Project UNNATI) தொடங்கியது. ஊழியர்களின் திறன் தளத்தை மேம்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் தற்போதைய பகுதி வேலைவாய்ப்பிலிருந்து சுயதொழில் அல்லது கூலி வேலைவாய்ப்பு மூலம் முழு வேலைவாய்ப்புக்கு மாற முடியும். இந்தத் திட்டம் 2 லட்சம் தொழிலாளர்களின் திறன் தளத்தை மேம்படுத்தும். மார்ச் 31, 2025 வரை 90,894 பேர் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Read more: மனித மண்டை ஓடுகளால் கோபுரங்களைக் கட்டிய கொடூர மன்னர்கள் யார் யார்? வரலாற்றின் இருண்ட பக்கங்கள்..