சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்…..! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை….!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வாங்க கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் சின்னம் நேற்று மதியம் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை கடந்தது. இதனை தொடர்ந்து, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, வரும் 17ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. அதேபோல வரும் 18 மற்றும் 19 போன்ற தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.


அதேபோல இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிகபட்ச ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக, அசௌகரியம் உண்டாகலாம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் ஐ ஒட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல் பகுதிகள், மன்னார்வளைகுடா மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும். அதாவது, மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம். இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரையில் தெற்கு அரபிக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் லட்சச்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், இடை இடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசலாம். மேலே குறிப்பிடப்பட்ட தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அறிக்கையின் மூலமாக அறிவுறுத்தி இருக்கிறது.

Next Post

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி….! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு….!

Mon May 15 , 2023
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தாமூர் குருவட்டம், பெருங்கரணை கிராமத்தைச் சேர்ந்த வசந்தா, செல்வம், மாரியப்பன், பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் மற்றும் சந்திரா உள்ளிட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் […]
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like