தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பணி வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அரசு பள்ளி சத்துணவு மையங்களில் உள்ள 64 சமையல் உதவியாளர் (Cooking Assistant) காலிப்பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
பணியிட விவரம்:
- ஈரோடு – 8
- மொடக்குறிச்சி – 3
- கொடுமுடி – 1
- பெருந்துறை – 4
- சென்னிமலை – 2
- அம்மாபேட்டை – 6
- அந்தியூர் – 11
- கோபிசெட்டிபாளையம் – 5
- நம்பியூர் – 6
- தூக்கநாயக்கன்பாளையம் – 1
- சத்தியமங்கலம் – 8
- பவானிசாகர் – 2
- தாளவாடி – 1
- ஈரோடு – 4
- கோபிசெட்டிபாளையம் நகராட்சி – 1
- சத்தியமங்கலம் நகராட்சி – 1
வயது வரம்பு: 19.12.2025 தேதியின்படி 21 நிறைவுப் பெற்று, 40 வயது மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர் பெண்கள் 18 முதல் 40 வயது வரை இருக்கலாம். கணவரை இழந்தவர்கள் 20 முதல் 40 வயது வரை இருக்கலாம். இப்பணியிடங்களில் 25 சதவீதம் கணவரை இழந்த மற்றும் கணவரை கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? குறைவான பார்வைத் திறன், உடல் இயக்கக் குறைபாடு, குணப்படுத்தப்பட்ட தொழுநோய், திரவ வீட்டினால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட கற்றல் திறன் குறைபாடு ஆகிய குறிப்பிட்ட உடல் திறன் குறைபாடு கொண்டு மாற்றுத்திறனாளிகள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் நியமனம் கோரும் சத்துணவு மையத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: இந்த பணியிடங்களுக்கு நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு, முதல் 1 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3,000 தொகுப்பூதியம் (Consolidated Pay) வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து, சிறப்பு காலமுறை ஊதியத்தில் (Special Time Scale of Pay) – நிலை 1 (Level–1) கீழ், மாதம் ரூ.3,000 முதல் ரூ.9,000 வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பிக்க விரும்பமுள்ள பெண்கள் இதற்கான விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முழுமையான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்த்துடன், நகல்களை இணைத்து காலிப்பணியிடங்களுக்கு தொடர்புடைய மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.01.2026.
Read more: தென்மாவட்ட மக்களே.. ஜன.1 முதல் முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்..! நோட் பண்ணுங்க..



