10-ம் வகுப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகல்… ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்…!

school certificate 2025

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பில்: 10-ம் வகுப்பு துணை தேர்வு கடந்த ஜூலை மாதம் நடந்தது. அத்தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்போது, தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும்.

மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப் பத்தின் இரு நகல்கள் எடுத்து ஆகஸ்ட் 18 மற்றும் 19-ம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை அங்கேயே பணமாக செலுத்த வேண்டும். புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டு விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்து கட்டணத்தையும் பணமாக அங்கேயே செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஏன் சுதந்திர தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது? அதன் வரலாற்றை தெரிஞ்சுக்கோங்க..!

Fri Aug 15 , 2025
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் உற்சாகத்துடனும் பெருமையுடனும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று நாட்டின் 79-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.. இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான பொன்னாள் ஆகும்.. இந்த நாள், சுதந்திரத்தின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. ஆனால், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் […]
1947 august 15 independence day celebration in india

You May Like