மத்திய வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவு செயல்படுகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு அமைச்சகத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டில் மோட்டார் போக்குவரத்து பிரிவில் உள்ள பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 37 இடங்களில் உள்ள புலனாய்வு அலுவலகங்களில் மொத்தம் 455 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணியிட விவரம்:
பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant) – 455
வயது வரம்பு: விண்ணப்பதார்களின் வயது 18 முதல் 27 வரை இருக்கலாம். விதிமுறைகளின்படி, எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 5 வருடங்களும், ஒபிசி பிரிவை சேரந்தவர்களுக்கு கூடுதலாக 3 வருடங்களும் வழங்கப்படுகிறது. அவைமட்டுமின்றி, அரசு பணியில் உள்ள விண்ணப்பதார்களுக்கு 40 வயது வரை தளர்வு உள்ளது.
கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்றவர்கள், சட்டப்படி பிரிந்து வாழ்பவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது. பொதுப் பிரிவிற்கு 35 வயது வரையும், ஒபிசி பிரிவில் 38 வயது வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவில் 40 வயது வரையும் இருக்கலாம்.
தகுதிகள்:
* அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்.
* இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமையும் கட்டாயம்.
மோட்டார் மெக்கானிசம் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
* குறைந்தது 1 ஆண்டு கார் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: நிலை 3 கீழ் அடிப்படை சம்பளமாக ரூ.21,700 முதல் அதிகபடியாக ரூ.69,100 வரை வழங்கப்படும். மேலும் சிறப்பு பாதுகாப்பு ஒதுக்கீடாக அடிப்படை சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அளிக்கப்படும். விடுமுறை நாட்களில் பணி செய்தால் அதற்கான தொகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு இரண்டு கட்டத் தேர்வு முறையின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது.
முதல் கட்டத் தேர்வு (Tier I): ஆன்லைன் வழியில் கொள்குறி (Objective) வகையில் நடைபெறும். மொத்தம் 100 கேள்விகள் 100 மதிப்பெண்கள். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும் (Negative Marking).
குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள்:
- பொது பிரிவு – 30
- ஒபிசி – 28
- எஸ்சி/எஸ்டி – 25
- EWS – 30
இரண்டாம் கட்டத் தேர்வு (Tier II): வாகனம் ஓட்டும் திறன் மற்றும் நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். மொத்தம் 50 மதிப்பெண்கள். இதில் குறைந்தது 40% மதிப்பெண்கள் பெற வேண்டும். இரண்டு கட்டத் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் சேர்த்து தகுதியானவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது? https://www.mha.gov.in/en என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் 6-ம் தேதி முதல் தொடங்கி, 28-ம் தேதி வரை பெறப்படுகிறது.
Read more: இந்த நாட்டில் அழகான இளம் பெண்களை வாடகை மனைவியாக எடுக்கலாம்.. ஆனால்!