Tax: 2024 மார்ச் மாதத்தில் வசூல் செய்யப்பட்ட GST வரி 11.5 சதவீதம் அதிகரிப்பு…!

ஜிஎஸ்டி வரி வசூல் 2024 மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023ல் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 11.5 சதவீதம் அதிகமாகும். இந்த வரிவசூல் இதுவரையிலான ஜிஎஸ்டி வசூலில் இரண்டாவது பெரிய தொகையாகும்.

மார்ச் மாதத்தில் வசூலான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் விவரம்;

மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.34,532 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.43,746 கோடியாகும். ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி இறக்குமதி செய்யப்ட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 40,322 கோடி உட்பட ரூ.87,947 கோடி ஆகும். மேலும் செஸ் வரியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 996 கோடி உட்பட ரூ. 12,259 கோடி ஆகும்.

தமிழகத்தை பொறுத்தவரை 2024 மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ.11,017 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ. 9,245 கோடி வருவாய் கிடைத்தது. புதுச்சேரியை பொறுத்தவரை மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.221 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 9 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதுச்சேரியில் ரூ.204 கோடி வருவாய் கிடைத்தது.

Vignesh

Next Post

App: மின் தொடர்பான பிரச்சனையா?… கவலை வேண்டாம்!… ஒரு கிளிக் செய்தால் போதும்!... மின்வாரியத்தின் அசத்தல் அறிவிப்பு!

Tue Apr 2 , 2024
App: தமிழ்நாடு மின்சார வாரியம், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் மின் வாரிய ஊழியர்களுக்கு செல்போன் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பை ஊழியர்கள் தங்களது போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள், இந்த ஆப் மூலம் மீட்டரில் பதிவாகியுள்ள மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. இதனால், கட்டண விபரம் நுகர்வோருக்கு உடனே எஸ்எம்எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், செல்போன் ஆப்பில் […]

You May Like