முன்னறிவிப்பின்றி ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் 12 செல்போன் ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளது. இது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் சிறந்த திட்டங்களில் ப்ரீபெய்டு திட்டங்கள்தான். இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய திட்டமான சில திட்டங்களை ஜியோ நீக்கியது பெரும் கவலை கொள்ள வைத்துள்ளது.
ஜியோ திட்டங்கள் சாமானிய மக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினருக்கு ஏற்ற வகையில் ரூ.151 முதல் ரூ.3119 வரை உள்ளது. நீக்கப்பட்ட திட்டங்களில் மிக முக்கியமான திட்டம் டிஸ்னி ஹாட் ஸ்டார் சந்தா வழங்கும் திட்டங்கள்.
இந்த நடவடிக்கைக்கு முன், ஜியோவின் பெரும்பாலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை இலவசமாக வழங்கியது. ஆனால் இப்போது, இந்நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவின் கீழ் வெறும் இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக வழங்கும் ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ரூ 1,499 மற்றும் ரூ.4,199 ஆகும். ரூ.1,499-ஐ பொறுத்தவரை, இது 84 நாட்களுக்கு தினமும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஒரு திட்டம் ஆகும். தவிர அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் நன்மைகள், ஜியோ ஆப்ஸ் மற்றும் ஒரு ஆண்டிற்கான Disney+ Hotstar ப்ரீமியம் சந்தா போன்ற பயனுள்ளவற்றை வழங்குகிறது.
ரூ 4,199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் : இது 365 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும் ஒட்டு திட்டம் ஆகும். கூடுதலாக அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் நன்மைகள், ஜியோ ஆப்ஸ் மற்றும் ஒரு ஆண்டிற்கான Disney+ Hotstar ப்ரீமியம் சந்தா போன்ற நன்மைகளையும் வழங்குகிறது.
- ரூ.151 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் திட்டம்
- ரூ. 333 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
- ரூ.499 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
- ரூ. 555 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் திட்டம்
- ரூ. 583 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
- ரூ. 601 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
- ரூ. 659 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் டேட்டா ஆட்-ஆன் ரீசார்ஜ் திட்டம்
- ரூ.783 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
- ரூ. 799 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
- ரூ. 1,066 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
- ரூ. 2,999 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்
- ரூ. 3119 டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் திட்டம்