12,000 விண்ணப்பதாரர்கள்; 450 பேரிடம் நேர்காணல்!. ஒருவரைக்கூட பணியமர்த்தாத நிறுவனம்!. என்ன காரணம் தெரியுமா?

interviews 450 out

AI-ஐ பயன்படுத்தி, தீர்வுகளை உருவாக்கிய காரணத்தால், தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று நேர்காணல் செய்த விண்ணப்பதாரர்களில் ஒருவரைக்கூட தேர்வு செய்யாத சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூரில் அமைந்துள்ள ஒரு தொழில்நுட்ப நிறுவனம், ஆரம்ப நிலை டெவலப்பர் பதவிக்காக வருடத்திற்கு ரூ.20 லட்சம் சம்பளத்தில் ஆட்சேர்ப்பு முயற்சி மேற்கொண்டது. இதற்காக 12,000 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதிலிருந்து 450 பேரிடம் நேர்காணல் செய்யப்பட்டது. ஆனால், ஒருவரையும் தேர்வு செய்ய முடியவில்லை.

இதுதொடர்பாக Reddit பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் ChatGPT போன்ற AI-ஐ பயன்படுத்தி தீர்வுகளை வழங்குகிறார்கள். இந்த அனுபவத்தை Developers India என்ற Reddit குழுவில் பகிர்ந்த அந்த நிறுவனம், “12,000-க்கும் மேற்பட்டோர் வேலைக்காக விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்களில் 10,000-க்கும் மேலானவர்களை தகுதி, திறன் குறைவாக இருப்பது அல்லது பணிக்குத் தேவையானத் தகவல்களுடன் ஒத்துப்போகவில்லையென்பதால் பணியமர்த்தவில்லை என்று கூறியுள்ளது. மேலும், “நாங்கள் கடுமையாக இருக்க விரும்பவில்லை, ஆனால் விண்ணப்பதாரர்களின் நேரத்தையும் எங்களுடைய நேரத்தையும் வீணாக்காமல், அவர்களை நேர்காணல் சுற்றுகளுக்கு அழைத்து பின்னர் நிராகரிப்பதைத் தவிர்க்கவேண்டியதற்காக இதை செய்தோம்,” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் நேர்காணல் நேரத்தில் ChatGPT போன்ற கருவிகளை பயன்படுத்த அனுமதித்திருந்தாலும், விண்ணப்பதாரர்களின் பதில்கள் அடிப்படை புரிதல் இல்லாமல் இருந்தன. அதாவது, அவர்கள் AI-generated பதில்களை நகலெடுத்து பயன்படுத்தினாலும், அவற்றின் அடிப்படையை உணரவில்லை என்பது தெரிய வந்தது. “நாங்கள் விண்ணப்பதாரர்கள் GPT பயன்படுத்தி பிரச்சனைகளை தீர்க்க கூட அனுமதித்தோம்,” ஆனால், நேரம் மற்றும் இடம் சிக்கல்களை (time or space complexity) பற்றி கேட்கும் போது, அல்லது அவர்கள் வழங்கிய குறியீட்டை விளக்கும்போது, பலராலும் பதிலளிக்க முடியவில்லை,” என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு குழு குறிப்பிட்டதாவது, பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் “vibe coding” என்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அதாவது, AI உருவாக்கிய பதில்களை நகலெடுத்து ஒட்டுகிறார்கள், ஆனால் அதின் அடிப்படை தர்க்கத்தை புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

மேலும், AI பயன்படுத்தும் விண்ணப்பதாரர்களால் ஆட்சேர்ப்பு நடைமுறை சவாலாக மாறிவிட்டதாக தெரிவித்தது. தொழில்நுட்ப திறனின் உண்மையானதன்மையை மதிப்பீடு செய்வதற்காக, சில நிறுவனங்கள் நேரடி குறியீடு எழுதும் தேர்வுகள் மற்றும் நேரடி நேர்காணல்களை (live coding & in-person interviews) அதிகரித்து வருகின்றன. இந்த சம்பவம், AI கருவிகளை புரிந்து கொண்டு சிறந்த முறையில் பயன்படுத்தும் திறன் மற்றும் அடிப்படை திறன்களை வளர்த்துக் கொள்வது முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது.

இந்த பதிவு ஆன்லைனில் கலவையான எதிர்வினைகளை பெற்றது. சில பயனர்கள் பல பயனர்கள் நிறுவனத்தின் விரக்தியை ஆதரித்தாலும், மற்றவர்கள் தவறான நேர்காணல் உத்தியைக் கடுமையாக விமர்சித்தனர். ஒரு பயனர், “உங்களுடைய ஆட்சேர்ப்பு குழு தவறான டெவலப்பர்களை கொண்டு வருகிறார்களோ, அல்லது உங்கள் ஆட்சேர்ப்பு செயல்முறையில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதோ,” என்று pointed out செய்தார். மற்றொரு பயனர் எழுதினார், “DSA சுற்றில் AI ஐ அனுமதிப்பது மிகவும் மோசமானது என்று பதிவிட்டிருந்தார்.

Readmore: நடுவானில் புகை.. அவசர அவசரமாக தரையிரக்கப்பட்ட லண்டன் விமானம்..!! பெரும் பரபரப்பு..

KOKILA

Next Post

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. அடுத்தடுத்து குட் நியூஸ் தரும் தமிழக அரசு..!! வேற மாறி அறிவிப்புகள்..

Mon Jun 16 , 2025
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின் அடிப்படையில், மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 209 பெண் காவலர்கள் தங்களது குழந்தைகளை நலமாக கவனிக்கும்படி தாங்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான மாற்றம் 03.06.2025க்குள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட அறிவிப்புகளை […]
govt job stalin

You May Like