Result: 12-ம் வகுப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு…!

Tn School students 2025

12-ம் வகுப்பு துணைத் தேர்வுகள் , ஜூன் & ஜூலை 2025 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2025 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத்தேர்வுகள் எழுதி , மறுகூட்டல் ( Re – total ) மற்றும் மறுமதிப்பீடு ( Revaluation கோரி விண்ணப்பித்தவர்களுள் , மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ( Notification பகுதியில் ) 20.082025 ( புதன்கிழமை ) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.


இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது . மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் , மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை ( Statement of Marks ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசின் தேர்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவர்.. சான்றிதழில் பாலினத்தை மாற்ற மறுத்த கல்வி நிறுவனம்..! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Wed Aug 20 , 2025
Court orders reissue of academic certificates for Northeast's 1st transgender doctor
law

You May Like