இன்று ஹாங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் பல உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்த தீ விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. தீ வேகமாக பரவியதால் சுமார் 700 குடியிருப்பாளர்கள் தற்காலிக தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்து கட்டிடங்களைச் சுற்றியுள்ள மூங்கில் சாரங்கள் மற்றும் கட்டுமான வலைகள் மீது விரைவாக பரவியது.. iதனால் பல அடுக்குமாடி குடியிருப்பு ஜன்னல்களில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் அடர்ந்த புகை வெளியேறுவதைக் காண முடிந்தது, இது அதிகாரிகள் 5 ஆம் நிலைக்கு எச்சரிக்கையை உயர்த்தத் தூண்டியது, இது மிக உயர்ந்த தீவிரம் கொண்ட தீ விபத்து என்பதை குறிக்கிறது..
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.. வீடியோ காட்சிகளில் குறைந்தது 5 கட்டிடங்கள் ஒரே நேரத்தில் எரிவதை காண முடிகிறது.. , இரவு வானத்தில் பிரகாசமான தீப்பிழம்புகள் எரிந்தன. உள்ளே சிக்கியவர்களில் பலர் வயதான குடியிருப்பாளர்கள் என்று உள்ளூர் கவுன்சில் உறுப்பினர் லோ ஹியு-ஃபங் கூறினார்.
ஹாங்காங்கில் கட்டுமானம் மற்றும் புதுப்பிக்கும் மூங்கில் சாரக்கட்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், பாதுகாப்பு கவலைகள் காரணமாக, பொதுத் திட்டங்களுக்காக அதை படிப்படியாக அகற்றும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் இந்த தீ விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. தீ விபத்தால் ஏற்பட்ட சேதத்தின் முழு அளவையும் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பிட்டு வருகின்றனர்.
Read More : “எந்த தார்மீக உரிமையும் இல்லை..” ராமர் கோவில் நிகழ்வு குறித்த கருத்துக்கு பாகிஸ்தானை சாடிய இந்தியா..!


