உத்தரபிரதேச பாஜக மூத்த தலைவரின் மகனின் 130க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெயின்பூரி பாஜக மகளிர் அணி தலைவர் சீமா குப்தாவின் மகன் சுபம் குப்தா, பெண்களுடன் பல இடங்களில் வைத்து உறவு கொண்டு செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த வீடியோக்களை பார்த்த பலரும் சீமா குப்தாவை விமர்சித்து வருகின்றனர்.
குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரின் மகன், தனது மனைவியுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக தகராறில் இருந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது மனைவி, “என்னை சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை செய்வதாகவும்; அவரின் காதலியுடன் இருக்கும் ஆபாச வீடியோக்களை அனுப்பி மனதளவில் துன்புறுத்தப்பட்டேன்,” என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மெயின்புரி காவல் துறை சம்பந்தப்பட்ட நபர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், அது அரசியல் குடும்ப விஷயம் என்பதால் அந்த விஷயம் மூடி மறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பாஜக எந்த கருத்தும் வெளியிடாமல் மௌனம் காப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “பாஜக (BJP) என்னும் கட்சி தங்களை ‘வேறுபட்ட கட்சி’ (Different Party) என்று பெருமைபடச் சொல்கிறது. பாஜக உண்மையில் வேறுபட்ட கட்சி தான்.. ஆனால் அது நல்ல விஷயங்களில் அல்ல, தவறான விஷயங்களில் முன்னுதாரணமாக இருக்கிறது” என்றார்.
மேலும் “கர்நாடகத்தில் ஏற்கனவே பாஜகவின் பிரபல நபர் தொடர்பான ஒரு ஆபாச வீடியோ ஊழல் நடந்தது. இப்போது உத்தரப்பிரதேசத்தில், 130 வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இதுவும் அந்த ஊழலுக்கு விட போட்டியாக இருக்கிறது என விமர்சித்துள்ளார்.