ஹைதராபாத்தில் கலப்படம் செய்யப்பட்ட கள் அருந்திய 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவின் குகட்பள்ளியில் உள்ள ஒரு கடையில் கலப்படம் செய்யப்பட்ட கள்ளை உட்கொண்ட பலருக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுமார் 15 பேர் ஹைதராபாத்தின் ராம்தேவ் மருத்துவமனையில் குறைந்தது அனுமதிக்கப்பட்டதாக கலால் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கப்பட்டுள்ளது.
கள்ளில் அல்பிரஸோலம், ஹைட்ரோகுளோரைடு மற்றும் டயஸெபம் உள்ளிட்ட மயக்க மருந்துகளின் கலவை கலந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வயிற்றுப்போக்கு, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேட்சல் மல்காஜ்கிரி மண்டலத்தைச் சேர்ந்த கலால் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..