யாரும் வெளியே போகாதீங்க…! 18 மாவட்டத்தில் இன்று வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும்…!

18 மாவட்டங்களில் இன்று வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மதுரை, திருச்சி, கோவை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், ஈரோடு, கரூர், திருப்பூர் உள்பட 18 மாவட்டங்களில் இன்று வழக்கத்தை விட வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளை முதல் 01.05.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் வரும் 3-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39 முதல் 42 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பயன்படுத்தாத வங்கி கணக்கால் வரும் சிக்கல்கள்?

Sun Apr 28 , 2024
நாம் வங்கி கணக்கை ஓபன் செய்து வைத்திருப்போம். ஆனால், ஏதோ ஒரு சூழலில் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு இருப்போம். இப்படி பல காலமாக பயன்படுத்தாமல் இருக்கும் வங்கி கணக்குகளுக்கு நிறைய சிக்கல் இருக்கின்றன. நாளடைவில் தேவைக்கு அதிகமாக, அல்லது அவசரத்திற்கு திறந்த வங்கி கணக்குகளை கவனிக்காமல் நாம் விடுவதால் பிரச்னைகள் நிறைய இருப்பதாக தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள். அப்படி பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளை இன்-ஆபரேட்டிவ் அல்லது டார்மண்ட் கணக்குகள் என்று அழைக்கின்றனர். […]

You May Like