தாயுமானவர் திட்டத்தில் 2 நாள் ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடுதேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் உயரிய நோக்கின் அடுத்த கட்டமாக, மாநிலத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தாயுமானவர் திட்டத்தில் 2 நாள் ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்ட செயதிக்குறிப்பில்; முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளியை முன்னிட்டு அக்.5, 6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



