#தர்மபுரி :பிறந்த 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஏரியில் மிதப்பு..! 

தர்மபுரி மாவட்ட பகுதியில் உள்ள நாய்க்கனூரில் இருக்கும் ஏரி வழியாக காலை நேரத்தில் சில விவசாயிகள் தனது விளை நிலங்களுக்கு சென்றிருக்கின்றனர்.இந்த நிலையில் அந்த ஏரியில் குழந்தையின் உடல் ஒன்று மிதப்பதை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். 


இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்களின் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தொப்புள் கொடியுடன் தண்ணீரில் மிதந்த குழந்தையை மீட்டு உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது பற்றி காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த குழந்தையானது பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை என்றும் அதனை ஏரியில் வீசி கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்களே குழந்தையை ஏரியில் வீசியுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

தனுஷின் சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளருக்கு தலையே சுத்திருச்சாம்..!! இதுக்கெல்லாம் காரணம் இந்த நடிகர்தானாம்..!!

Thu Dec 1 , 2022
ஒரு படத்திற்கு தனுஷ் கேட்ட சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர் ஆடிப்போய்விட்டாராம். நடிகர் தனுஷின் கைவசம் வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் உள்ளது. இந்நிலையில் மிகக் குறுகிய காலத்திலேயே தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளார். இப்போது தனது சம்பளத்தை தடாலடியாக தனுஷ் உயர்த்தியுள்ளாராம். அதாவது, தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான ரஜினி மற்றும் விஜய் சம்பளம் ரூ.100 கோடியை […]
dhanush 1658975846899 1658975847206 1658975847206

You May Like