அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாநிலத்தில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலாஸ்காபாக்ஸ் நோயால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அலாஸ்காவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி பிற்பகுதியில், ஆங்கரேஜின் தெற்கே உள்ள கெனாய் தீபகற்பத்தில் வாழ்ந்த ஒரு முதியவர் இந்த நோயால் உயிரிழந்துள்ளார். அவருக்கு நோயெதிர்ப்பு குறைபாடு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா மாநிலத்தின் தொற்றுநோயியல் நிபுணர் ஜூலியா ரோஜர்ஸ் கூறுகையில், “மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஆனால் விழிப்புடன் இருப்பது அவசியம். நாங்கள் […]

திருச்சியில் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சியில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதிக்கு அருகே உள்ள தேவஸ்தான ரயில் நிலைய கேட்டு அருகில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததையொட்டி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நபரின் சடலத்தை கைப்பற்றினர். ரயிலில் அடிபட்டு அவர் இறந்திருக்க […]

அலிப்புர்தார் மாவட்டத்தில், அந்தோதயா அன்ன யோஜனா கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் போன, தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும், 58 வயதான முதியவர் ரேஷன் பொருட்களை வாங்க முடியாததால், பட்டினியால் இறந்துள்ளார். இது குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை, மேற்கு வங்காளத்தில் உள்ள அலிப்புர்தார் மாவட்டத்தில், இலவசமாக ரேஷன் பொருட்கள் பெறும் […]

கிரேட்டர் நொய்டாவில் இரண்டு பெண்கள் உட்பட 4 நபர்கள், பூட்டிய வீட்டிற்குள் சடலமாகக் கிடந்தனர். எரிவாயு கசிந்ததே இவர்களின் மரணத்திற்கு காரணம் என்று, காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் துஸ்யானா பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதை கவனித்த அக்கம் பக்கத்தினர், இதனை வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்தனர். வீட்டின் உரிமையாளர் ஈகோடெக்-3 காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு கொடுத்த தகவலின் பெயரில், […]

பஃபர் ஃபிஷ் என்றழைக்கப்படும் கோள மீனை முறையாக சுத்தப்படுத்தி சமைக்காததால், பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞர் மரணமடைந்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பரான மேக்னோ செர்ஜியோ கோம்ஸ் என்பவருக்கு கோளமீனை பரிசாக வழங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இரண்டு நண்பர்களும் மீனை சமைத்து எலுமிச்சை சாறுடன் சாப்பிட்டுள்ளனர். உணவு சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு வாய் மறத்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் […]

சி.சி.எஸ் விதிகளின்படி, காலமான அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் வாழ்க்கைத் துணை உயிர் வாழ்ந்திருந்தால், குடும்ப ஓய்வூதியம் முதலில் மனைவிக்கு வழங்கப்படுகிறது. மேலும் காலமான அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரரின் வாழ்க்கைத் துணை குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவராக மாறிய பின்னரே, குழந்தைகள், பிற குடும்ப உறுப்பினர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத் துறை, ஒரு பெண் அரசு ஊழியர் அல்லது பெண் ஓய்வூதியர் தனது […]

மேற்குவங்க மாநிலத்தில் ஒரே நாளில் 10 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. மேற்குவங்க மாநில முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் நேற்று ஒரே நாளில் மரணம் அடைந்தன. மேற்குவங்க மாநிலம் ஜாங்கிப்பூர் துணை பிரிவு மருத்துவமனையிலிருந்து முர்ஷிதாபாத் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தனர் என்பது […]

உடற்பயிற்சி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அத்தியாவசியமான ஒன்று. மருத்துவர்களும் அனைவரையும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஊக்குவித்து வருகின்றனர். ஆனாலும் தற்காலங்களில் நடைபெறும் உடற்பயிற்சி தொடர்பான மரணங்கள் உடற்பயிற்சியின் மீது புதுவித பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபலங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் மரணம் அடையும் செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம். இதற்கான காரணங்கள் என்ன இவற்றைத் தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம் . பொதுவாக கரோனரி தமனி என அழைக்கப்படும் […]

குஜராத் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் பழுதாகி ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக வந்த சொகுசு பேருந்து மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் தோகத் – கோத்ரா நெடுஞ்சாலையில் பழுதாகி ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்து மீது வேகமாக வந்த சொகுசு பேருந்து மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை […]

காஷ்மீரில் நேற்று அதிகாலை ஹவுஸ் படகில் திடீரென தீப்பற்றியது. இதனால் அருகில் இருந்த படகுகளுக்கு வேகமாக பரவியது. இந்த தீ விபத்தில் 6 படகுகள் மற்றும் அதை ஒட்டியிருந்த மரக் கொட்டகைகள் தீப்பிடித்து எரிந்ததால் 40 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் மூன்று சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். சம்பவத்திற்குப் பிறகு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன, மேலும் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் தீயை அணைக்க […]