கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது..
தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.. மின் துறை, போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஏற்கனவே போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் கூட்டுறவு பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.. கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்பட்ட உபரித்தொகையை கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. லாபம் ஈட்டாத கூட்டுறவு சங்கங்கள் இருப்பின் அதன் ஊழியர்களுக்கு ரூ.3,000 வழங்கவும், தொடக்க சங்க பணியாளர்களுக்கு ரூ. 2400 போனஸ் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 ஊழியர்களுக்கு ரூ.44 கோடியே 11 லட்சம் போனஸ் வழங்கப்பட உள்ளது.. அரசின் இந்த நடவடிக்கை கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஊக்கத்துடனும், ஆர்வத்துடனும் பணியாற்றுவதையும், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சி உடன் கொண்டாடுவதையும் உறுதி செய்திட வழிவகை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..