ஓடிக் கொண்டே கொண்டிருக்கும் இன்றைய அவசர உலகில், நாம் உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்கவில்லை என்பது உண்மை. ஆனால், உடற்பயிற்சி செய்யாததால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இதயத்தை பாதிக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து ஐந்து நாடுகளில் உள்ள 14 ஆயிரம் தன்னார்வலர்களின் தரவுகளை ஆய்வு செய்தனர். இதில், நடத்தல், ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை செய்யும் போது இதய நோய் அபாயம் 28 சதவீதம் வரை குறைகிறது என்று தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியில், தினசரி 20 முதல் 27 நிமிடங்கள், கூடுதலாக 5 நிமிடமும், வேக நடைப்பயிற்சி, ஓட்டம், படிக்கட்டில் ஏறுதல், மிதிவண்டி ஓட்டுதல் போன்ற சிறிய உடற்பயிற்சிகளையும் செய்யும் போது, ரத்த அழுத்தம் கணிசமாக குறையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, டாக்டர் ஜோ ப்ளாட்ஜெட் கூறுகையில், நடப்பது, ஓடுவது, வேக நடைப்பயிற்சி, மிதிவண்டி ஓட்டுவது போன்ற சிறிய சிறிய உடற்பயிற்சிகளே ரத்த அழுத்தத்தை பெரும்பாலும் குறைக்கும்.
இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. ஒருவரின் உடல் எப்படி இருந்தாலும் இந்த வகையான உடற்பயிற்சிகள் மிகவும் உதவியாக இருக்கும். நீண்ட நேரமாக உட்கார்ந்தே இருப்பது, வேலை செய்வது போன்றவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். நிற்பது, நடப்பது போன்றவை ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.