தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது அதிருப்தி அலை நிலவிவரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெகவிற்கு 39% ஆதரவு கிடைத்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த தனியார் செய்தி சேனல் நடத்திய ஆய்வில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் தலைமுறை வாக்காளரிடம் உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு, திமுக கூட்டணிக்கு 26% பேர் ஆதரவை தெரிவித்துள்ளனர் வெளிப்படுத்தியுள்ளனர். அதேசமயம், அதிமுக கூட்டணிக்கு 18% பேரும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 39% பேரும், சீமானின் நாதகவிற்கு 12%, மற்ற கட்சிகளுக்கு 5% பேரும் தங்களது ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால், 18 முதல் 30 வயது வரை உள்ள இளைய தலைமுறையினர் ஆதரவில் தவெக, திமுக, நாதக இடையே கடும் போட்டி நிலவுகிறது. கட்சி வாக்குகள் ஒருபக்கம் இருந்தாலும், சரியான வேட்பாளர் தேர்வு என்பது முடிவுகளை மாற்ற அதிகம் வாய்ப்புள்ளது. சரியான வேட்பாளரை தேர்வு செய்யாவிட்டால் பல தொகுதிகளில் கட்சிகள் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும்.
விஜய் யாருடைய வாக்குகளை பிரிக்கப்போகிறார் என்பதை பொறுத்து தேர்தல் முடிவுகள் மாறுவது நிச்சயம், சர்வே-யின்படி ஆளும் திமுக அரசுக்கு எதிரான வாக்குகளை பெரிய அளவில் பிரிக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் அதிமுகவுடன் விஜய் கைகோர்த்தால் பெரிய அளவில் வெற்றி நிச்சயம், இருப்பினும் இரு தலைவர்களின் ஈகோ அதற்கு இடம் கொடுக்காதது திமுகவிற்கு பெரிய பிளஸ் பாண்ட்டாக இருக்கும்.
மேலும் திமுகவிற்கு பெண்களின் ஆதரவு பல இடங்களில் பெரிதாக எதிரொலிக்கிறது. அதாவது திமுகவின் நலத்திட்டங்கள் இதற்கு பெரிய காரணமாகும். இருப்பினும் இளம்பெண்களின் ஆதரவை திமுகவும், தவெகவும் கிட்டத்தட்ட சம அளவில் பகிர்ந்துக்கொள்ள வாய்ப்புள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த மௌனத்துடன் இருக்கின்றனர். சர்வேபடி, 58% பேர் முடிவு செய்யாமல் இருப்பது இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் சர்வே-யின் படி இம்முறை விவசாயிகளின் ஆதரவு அதிமுகவிற்கு அதிகம் காணப்படுகிறது. திமுக அடுத்து நெருங்கி வந்தாலும் விவசாயிகளின் ஆதரவு அதிமுகவிற்கே. அதே சமயம் சீமானுக்கும் குறிப்பிடத்தக்க அளவு விவசாயிகளின் ஆதரவு உள்ளது.
மேலும், பல இடங்களில் உள்ளாட்சியின் ஆளும் பிரதிநிதிகளின் அடாவடி கட்டப்பஞ்சாயத்து, திமுகவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். ஆளும் திமுகவிலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலும் பல இடங்களில் உள்கட்சி பூசல் இருந்து வருகிறது. இது அந்த கட்சிகளின் வெற்றிய பாதிக்கிறது.
அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு சிறப்பு(31%), மிகச் சிறப்பு(13%), சுமார் (42%), மோசம் (11%) என கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், ஆளும் திமுக அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசிவருவது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Readmore: லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை…! மயங்கி விழுந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதி…!