21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: “பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லையா..?” – நயினார் நாகேந்திரன்

Nainar nagendran 2025

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் கடந்த 23 ஆண்டுகளாக பல அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார். இவர் அங்கு படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.


போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த நிலையில்அவரை பள்ளி கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்ளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் தைரியம் அந்த ஆசிரியருக்கு எப்படி வந்தது? என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை உலுக்குகின்றன.

மாணவிகள் புகார் அளித்த பின் தற்போது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவிட்டது சிறு ஆறுதல் அளித்தாலும், பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை எனும் கசப்பான உண்மை மனதை வாட்டி வதைக்கிறது. படிக்கும் மாணவச் செல்வங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் தைரியம் அந்த ஆசிரியருக்கு எப்படி வந்தது?

திமுக ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கால் குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வரும் அவல நிலை மிகவும் கொடூரமானது. நான்காண்டு ஆட்சியின் விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள், நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்ல பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என கூறியிருந்தார்.

Read more: 10 வருஷமா சித்தி கொடுமை.. மன உளைச்சலில் பிளஸ் டூ மாணவி விபரீத முடிவு..!! நெஞ்சை பதற வைத்த சம்பவம்

Next Post

உளுந்தூர்பேட்டை போலீசுக்கு நெல்லை பெண் மீது வந்த ஆசை.. திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசம்..!! ஷாக் சம்பவம்

Sun Jul 6 , 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேர்ந்த சம்பத் (28), தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின் போது மீட்பு பணிகளில் ஈடுபட நெல்லை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த  பெண்ணுடன் சம்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். […]
rape

You May Like