கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அனந்தபூர் கிராமத்தை சேர்ந்த துகாராம், சாவித்திரி, ரமேஷ், வைஷ்ணவி உள்ளிட்ட 21 பேர், கடவுளை காண வேண்டும் என்ற காரணத்தால் உயிர்த்தியாகம் செய்யத் திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் பரவியதும், போலீசார் மற்றும் அப்பகுதியின் மடாதிபதி உடனடியாக வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணையில், சந்தா ராம் பால் என்ற சாமியார், 2014 ஆம் ஆண்டு கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் எழுதிய புத்தகத்தைப் படித்த 21 பேர், கடவுளை காண உயிர் தியாகம் செய்ய வேண்டும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். செப்டம்பர் 8ம் தேதி உன்னத கடவுள் பூமிக்கு வருவார்; அன்றைய தினம் அவர்களை அழைத்துச் செல்வார் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். இதனால், துகாராம் உட்பட 21 பேரும் அன்றைய தினம் உயிர்த்தியாகம் செய்யத் தயாராகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதில் துகாராம், சாவித்திரி, ரமேஷ் மற்றும் வைஷ்ணவி ஆகிய 4 பேரை தவிர மீதி 17 பேர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. அதிகாரிகள் தற்போது அவர்களை மன மாற்றம் செய்யும் முயற்சியிலும், சட்டரீதியான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் கிளப்பியுள்ளது.
Read more: “அண்ணா பெயரை வைத்து பிச்சை எடுக்குற.. நீ எனக்கு வேஷம் கட்டாத..!!” விஜய்க்கு கமல்ஹாசன் பதிலடி..