மத விருந்தில் ஹல்வா சாப்பிட்ட 250 பேருக்கு உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்..!

mass food poisoning 1

மத்தியப் பிரதேசத்தில் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட ஹல்வா சாப்பிட்ட 250 கிராமவாசிகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் நடந்த ஒரு மத விருந்தில் உணவு சாப்பிட்ட பின்னர், 250 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் அல்வா தயாரிக்கப்பட்டதால் பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது…


சிவபுரி மாவட்டத்தின் கோலாரஸ் தாலுகாவின் மொஹ்ராய் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை இனிப்பு சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு கிராமவாசிகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..

தகவல் கிடைத்ததும் சுகாதாரத் துறை மற்றும் எஸ்டிஎம் கோலாரஸ் அனுப் ஸ்ரீவஸ்தவா சம்பவ இடத்திற்கு விரைந்தனர்… இதுவரை, 175 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர், 2 பேர் கோலாரஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில நோயாளிகள் மாவட்ட மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ யாரும் ஆபத்தான நிலையில், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதே நேரத்தில், ஹல்வா மற்றும் நெய்யின் மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டன. உணவுத் துறையின் முதற்கட்ட விசாரணையில் நெய் உண்ணக்கூடியது அல்ல, அது வழிபாட்டு நோக்கங்களுக்காக மட்டுமே என்று தெரியவந்தது.” என்று தெரிவித்தனர்..

கிராம பஞ்சாயத்து தலைவர் ஷிகர் தகத் பேசிய் போது, விருந்துக்கு ஹல்வா தயாரிப்பதற்காக உள்ளூர் கடையில் இருந்து நெய் வாங்கப்பட்டது என்று தெரிவித்தார்.. மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சஞ்சய் ரிஷேஷ்வர் பல மருத்துவர்கள் குழுக்கள் கிராமத்தில் முகாமிட்டு இரவு முழுவதும் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தினார்..

Read More : ஆசிரியர்களுக்கு இனி இது கட்டாயம்; உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..

RUPA

Next Post

600-ஐ கடந்த பலி எண்ணிக்கை.. 1,300 பேர் படுகாயம்.. ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம்..!!

Mon Sep 1 , 2025
Over 600 killed in massive Afghanistan earthquake, villages razed: Key updates
afghanistan earth

You May Like