பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11.. NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..!

eps piyush anbumani ttv nda

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன..


இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினார்.. தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.. இந்த பேச்சுவார்த்தையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், எல். முருகன், தமிழிசை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்..

இதை தொடர்ந்து அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.. பாஜக நிர்வாகிகளுடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் அதிமுக – பாஜக இடையிலான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.. இபிஎஸ்,  பியூஷ் கோயலும் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்..  

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார்.. பாமக தலைவர் அன்புமணியும் அதிமுக வலுவகத்திற்கு வந்தார்.. பாமக, அமமுக கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு கையெழுத்தானது.. அதன்படி பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கபப்ட்டுள்ளது. என்.டி.ஏ கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Read More : திடீர் ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்த தவெக.. எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு..?

RUPA

Next Post

பம்பர் திட்டம்.. வெறும் 10 ஆண்டுகளில் ரூ. 25 லட்சம் சம்பாதிக்கலாம்.. இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Mon Mar 23 , 2026
பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுபவர்களுக்கு, தபால் நிலையத்தின் தொடர் வைப்புத் திட்டம் (RD) இன்றும் மிகவும் நம்பகமான, அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற சேமிப்புத் தேர்வாகத் திகழ்கிறது. சிறிய தொகைகளுடன் தொடங்கி, நீண்ட கால அடிப்படையில் ஒரு பெரிய நிதியை உருவாக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு, 10 ஆண்டுகாலத் தவணைக்காலம் மிக உயர்ந்த வருமானத்தை வழங்குகிறது. மாதம் தோறும் வெறும் ரூ. 15,000 மட்டும் […]
671332c659f51 post office schemes 282848327 16x9 1

You May Like