தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: “தவெகவின் இந்த வெற்றி என்பது பண பலத்திற்கும், அதிகார பலத்திற்கும் கிடைத்த அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையே தவிர மக்கள் அளித்த தீர்ப்பல்ல” என்று சாடியுள்ளார். தோல்வி பயம் காரணமாக ஒட்டுமொத்த அமைச்சரவையையும் களத்தில் இறக்கி, வாக்காளர்களுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியும், அதிமுக நிர்வாகிகள் மீது […]
ADMK
தமிழக அரசியலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஏற்படுத்தும் தாக்கம், திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் கணக்குகள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. தாராபுரத்தில் அதிமுக முன்னிலை பெற்றதாகவும், மதுராந்தகத்தில் தவெக வலுவான போட்டியை வெளிப்படுத்தியதாகவும் வெளியாகியுள்ள தகவல்களை ஒப்பிட்டு, இரு திராவிடக் கட்சிகளின் அரசியல் வியூகங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தவெகவின் வளர்ச்சியைத் தடுக்க திமுகவும் அதிமுகவும் தனித்தனியாகச் செயல்படுவதற்குப் […]
அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களை தவெக தரப்பினர் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, இதற்கு மக்கள் தான் சரியான பதிலை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து நியாயம் கேட்பது போல் தனது எக்ஸ் பதிவில் அவர் கருத்துகளை பதிவு செய்துள்ளார். கட்சியின் வெற்றிக்காக பல ஆண்டுகளாக உழைத்த நிர்வாகிகளையும், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களையும் […]
அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செம்மலை, அமைச்சர் பார்த்திபன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி சலசலப்பு காரணமாக கடந்த மே மாதம் அவர் கட்சியிலிருந்து விலகினார். அப்போது எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்திருந்த செம்மலை, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி தவெகவில் இணைந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு […]
தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். இத்துடன் முதல்வர் விஜய் 2 […]
அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டாக கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் எழுதிய கடிதத்தில், “2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி எடுத்த சில ஒருதலைப்பட்சமான முடிவுகளாலேயே கட்சி தொடர் பின்னடைவை சந்தித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். அண்மையில் வெற்றிபெற்ற 47 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் 25 பேர், தலைமை எடுத்த தவறான நகர்வுகளை சுட்டிக்காட்டியுள்ளனர். […]
முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்த விவகாரம். தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்று பெரும் பரபராப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளுக்கு எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என அதிமுக தலைமை சார்பாக தேர்தல் ஆணையத்தில் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த […]
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. இந்த சூழலில் நேற்று கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 […]
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன.. தேர்தலுக்கு பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக இந்த தேர்தலில் […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணையும் நிகழ்ச்சி இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலுகத்தில் நடைபெற்றது.. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா “ அதிமுக நிர்வாகிகள் 90% பேர் தவெகவுக்கு வருவார்கள்.. கட்சியில் சேர்ந்தவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சமமான பணி வழங்கப்படும்.. எம்.ஜி.ஆருடன் பணியாற்றியவர்கள் தவெகவுக்கு வந்ததில் மகிழ்ச்சி.. ஜெயலலிதாவை தவிர வேறு யாரையும் அதிமுக பொதுச்செயலாளராக அக்கட்சி தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை..” என்று தெரிவித்தார்.. இந்த […]

