தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு திங்கள்கிழமை உடன் முடிவுற்ற நிலையில், மொத்தம் உள்ள 1,07,395 இடங்களுக்கு, 2,99,558 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன அவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 8ம் தேதி முதல் தொடங்கி திங்கள்கிழமை முடிவுற்றது.
இந்த நிலையில், 1,15,752 மாணவர்கள், 1,28,274 மாணவிகள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர்கள் என ஒட்டுமொத்தமாக 2,99,558 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் இதில் 2,44,104 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருக்கின்றனர்