சேலம் அருகே மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர் போக்சோ(Pocso) சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் மேச்சேரி பகுதியில் அமைந்துள்ள அரசு துவக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜியா உல் ஹக்(44). இவர் அந்தப் பள்ளியில் பயின்று வரும் 5-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தனது செல்போனில் ஆபாச படங்களை காட்டி தொடர் பாலியல் தொல்லை […]

மாணவர்கள் கல்விக் கடன் பெற இன்று மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெறும் கல்விக் கடன் மேளாவில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் […]

கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட கல்விக்கடன் விண்ணப்பங்களில் தகுதியான மாணவர்களுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட முன்னோடி வங்கியும் (இந்தியன் வங்கி) இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் அனைத்து வங்கிகளின் சார்பில் வரும் 15.02.2024 அன்று காலை 9.00 மணி அளவில் ஞானமணி கல்லூரி வளாகத்தில் (NH -7) பாச்சலில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே […]

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அட்டைகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், எண்ணும் எழுத்து திட்டம் படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளின் செயல்திறன் மற்றும் திறன், மனப்பான்மை உள்ளிட்ட குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் அடிப்படையில் மாணவர் அறிக்கை அட்டை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. […]

தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுப் பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக, பேச்சுத் தமிழ் வகுப்புகளை வழங்கி வருகிறது. இது குறித்து தமிழக அரசு தனது செய்தி குறிப்பில்; தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுப் பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக, பேச்சுத் தமிழ் வகுப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, ஒன்றிய அரசுப் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், பிற மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்தோருக்கு இந்தி […]

இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமமந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. 2023-24ஆம் ஆண்டிற்கு https://scholarships.gov.in/public/FAQ/topclass school list 2211 compressed.pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரது உச்ச கட்ட வருமான […]

இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்; நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, https://sainikschool.ncog.gov.in/ என்ற இணையதளம் வழியாக டிச.16-ம் தேதிக்குள் […]

11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்க்கும் அகமதிப்பீடு மதிப்பெண் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், பள்ளி மாணவர்களின் வருகை பதிவுக்கு ஏற்ப, அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப வேண்டும். இவற்றை பின்பற்றி வருகைப் பதிவு, பள்ளித் தேர்வுகள், செயல் திட்டங்கள், கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீடு […]

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்கள் பிள்ளைகளின் எதிர்காலக் கல்வியை கருத்தில் கொண்டு ஆசிரியர் நல நிதியிலிருந்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை; ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற, பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பட்டப்படிப்பிற்கு ரூ.5,000/-ம், […]

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு […]