லடாக்கில் உள்ள சியாச்சின் தள முகாமில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் இரண்டு அக்னிவீரர்கள் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். “உலகின் மிக உயரமான போர்க்களம்” என்று அழைக்கப்படும் சியாச்சினில் மீட்புப் பணி நடந்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மணி நேரம் சிக்கிய பின்னர் அவர்கள் இறந்தனர். ஒரு ராணுவ கேப்டன் மீட்கப்பட்டார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் வடக்கு முனையில் சுமார் 20,000 அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனிப்பாறையில் பனிச்சரிவுகள் ஏற்படுவது பொதுவான நிகழ்வாக மாறி உள்ளது. ஏனெனில். வெப்பநிலை வழக்கமாக -60 டிகிரி செல்சியஸாகக் குறைகிறது.
2021 ஆம் ஆண்டில், சியாச்சினில் துணைப் பிரிவு ஹனீஃப் மீது பனிச்சரிவு ஏற்பட்டதில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆறு மணி நேர நடவடிக்கைக்குப் பிறகு மற்ற வீரர்கள் மற்றும் போர்ட்டர்கள் மீட்கப்பட்டனர்.
2019 இல் ஏற்பட்ட மற்றொரு மிகப்பெரிய பனிச்சரிவில் சிக்கி 4 வீரர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.. 18,000 அடி உயரத்தில் ஒரு போஸ்ட் அருகே ரோந்து சென்ற 8வீரர்கள் குழுவை பனிச்சரிவு தாக்கியது.
2022 ஆம் ஆண்டில், அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் 7வீரர்கள் இறந்தபோது, பனிச்சரிவு காரணமாக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டன. பனிச்சரிவின் தீவிரம் அந்த அளவுக்கு இருந்ததால், காணாமல் போன ராணுவ வீரர்களின் உடல்கள் 3 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டன.
2022 ஆம் ஆண்டில், ராணுவம் முதன்முறையாக, ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்திடமிருந்து 20 பனிச்சரிவு மீட்பு அமைப்புகளை வாங்கியது. சியாச்சின் பனிப்பாறை மற்றும் காஷ்மீர் மற்றும் வடகிழக்கின் பிற உயரமான பகுதிகளில் பனிச்சரிவுகள் மற்றும் நிலச்சரிவுகளில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்த நிலையில், இது நீண்டகாலமாக நிலுவையில் இருந்த தேவையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..



