இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே ஆன்லைன் கேம்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி வருகின்றனர். மேலும் இதனால் பல லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை இழந்து சிக்கலையும் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலரும் பறளித்து வந்தனர். இதனையடுத்து பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் ‘ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம்’ என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்நிலையில் இன்று, பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை மக்களவையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமர்ப்பித்தார்.
இந்த மசோதா, ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வரவேற்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கீகாரமற்ற சூதாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம் மற்றும் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் விதிமுறைகளும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடும் நபர்களுக்கு, ரூ.1 கோடி வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என இந்த மசொத்தவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட கேமிங் மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
1.பணம் வைத்து ஆன்லைன் விளையாடும் செயல்களுக்கு நேரடி தடை இல்லை.
2.ஆனால், அதற்கான பரிவர்த்தனைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படுத்த அனுமதிக்கப்படாது.
3.தடை செய்யப்பட்டஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாட்டில் ஈடுபட்டால், ₹1 கோடி அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
4.சூதாட்ட விளையாட்டுகளுக்கான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படும்.
5.அதே நேரத்தில், திறன்களை அடிப்படையாகக் கொண்ட e-sports மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுகள் விளையாட்டுகள் தொடரும்.
6.பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோத ஆன்லைன் கேமிங் தளங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
Read More: UPI புதிய விதி: PhonePe, Google Pay பயனர்களுக்கு ஷாக் நியூஸ்.. இனி இப்படி பணம் அனுப்ப முடியாது!