தேசிய அளவில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3,058 தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று (நவம்பர் 27) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் (RRB Chennai) அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நிரப்பப்படும் பணியிடங்கள்: இந்திய ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பதவிகளில் கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், அக்கவுண்ஸ் கிளார்க் உடன் டைப்பிஸ்ட், ஜூனியர் கிளார்க் உடன் டைப்பிஸ்ட் மற்றும் டிரைய்ன் கிளார்க் ஆகிய பதவிகளில் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 30 வயது வரை இருக்கலாம். 2026 ஜனவரி அடிப்படையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் பின்பற்றப்படும்.
கல்வித்தகுதி:
* விண்ணப்பதார்கள் கட்டாயம் 12-ம் வகுப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* அக்கவுண்ஸ் கிளார்க் உடன் டைப்பிஸ்ட் மற்றும் ஜூனியர் கிளார்க் உடன் டைப்பிஸ்ட் ஆகிய 2 பதவிகளுக்கு மட்டும் ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ரயில்வே வேலைவாய்ப்பிற்கு 2 கட்ட தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. கணினி வழியில் தேர்வு நடைபெறும், டைப்பிஸ்ட் பதவிகளுக்கு திறன் தேர்வு நடைபெறும். அதனைத்தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: தேர்வாகும் நபர்களுக்கு அடிப்படையில் சம்பளம் ரூ.19,900 முதல் 21,700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
Read more: Flash: 3 மணி நேரத்தில் உருவாகிறது டிட்வா புயல்..! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..



