உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கில் ஒன்றான இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,000 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது . இந்த அறிவிப்பின்படி ரயில்வே துறையில் காலியாக உள்ள டெக்னீசியன் கிரேடு 1 சிக்னல் மற்றும் டெக்னீசியன் கிரேடு 2 சிக்னல் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி […]

எர்ணாகுளம்-பிரம்மபூர் முன்பதிவற்ற வாராந்திர சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 தேதி வரை நீட்டிப்பு. தாம்பரம் – சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரயிலின் இயக்கம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம் பிப்ரவரி 15 முதல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-பிரம்மபூர் முன்பதிவற்ற வாராந்திர சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 02-ம் தேதி முதல் மார்ச் […]

ஓசூர் – பொம்மசந்திரா இடையே MRTS ரயில் வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்க ரூ.29.44 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம். ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பை (MRTS) அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தம் பாலாஜி ரெயில்ரோட் சிஸ்டம்ஸ் மற்றும் ஹபோக் கன்சல்டன்ட்ஸ் ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ.29.44 லட்சம் மதிப்பில் கையெழுத்தானது. அத்திபள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை […]

இந்திய போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கி வருவது ரயில்வே துறை. பெருநகரங்கள் முதல் கிராமங்களையும் இணைக்கும் வகையில் இந்திய ரயில்வே துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புக்கிங் செய்த அனைவருக்கும் டிக்கெட் கிடைக்கும் வகையில் மெகா திட்டம் ஒன்றை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. நீண்ட தூர பயணம் என்றாலும் குறைவான கால அளவுள்ள பயணமாக இருந்தாலும் பொதுமக்கள் முதலில் தேர்வு செய்வது ரயில்வே […]

கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 சதவீதம் தள்ளுபடி கிடைத்தது. 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி கிடைத்தது.. ரயில் டிக்கெட்டுகளில் இந்தச் சலுகைகள் அஞ்சல்/எக்ஸ்பிரஸ்/ராஜ்தானி/ சதாப்தி/துரண்டோ ஆகிய ரயில்களின் அனைத்து வகுப்புகளுக்கும் வழங்கப்பட்டன, ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக சலுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே மூத்த குடிமக்களுக்கு, இந்த சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று […]

ரயிலில் பயணிக்கும்போது இனி நீங்கள் உணவு ஆர்டர் செய்தால், கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆம், ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வானது ரொட்டி முதல் தேநீர் வரை என அனைத்திலும் பொருந்தும். ரயில்வே உணவு மெனுவில் மேலும் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக IRCTC தெரிவித்துள்ளது. இதனால் […]

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. பயணிகளின் பாதுகாப்பு, ரயிலின் வேகம், பெட்டியின் வடிவமைப்பு, உணவு, பானங்கள் போன்றவற்றை ரயில்வே வழங்கி வருகிறது.. இதை தொடர்ந்து தற்போது பயணிகளுக்கு முழுமையான மருத்துவ வசதிகளையும் ரயில்வே வழங்க உள்ளது. ஆம்.. நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிகளுக்கு போதுமான மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படும். ரயிலில் பயணிக்கும்போது சளி, சளி, காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு போன்ற […]

சென்னை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திற்க்கு செல்ல இருந்த ரயில் பழுதாகி தண்டவாளத்தில் நின்றதால் ரயில்வே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்தப் பாதையில் செல்ல வேண்டிய ஏராளமான ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திற்கு செல்ல வேண்டிய தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 4 மணி அளவில் வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது இந்த ரயிலின் ஆறாவது […]

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது.. டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் போன்றவை காரணமாக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை தேர்வு செய்கின்றனர்.. இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகி உள்ளது… ஆம்.. ரயில் பயணத்தின் போது இனி, வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம். இந்திய ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனம், ஐஆர்சிடிசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. வாட்ஸ்அப் மூலம் பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளை […]

ஒரு நிமிடத்திற்கு 2.25 லட்சம் டிக்கெட் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்… மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர், 2023-2024 நிதியாண்டில் 7,000 கிலோமீட்டர்களுக்கு கூடுதல் ரயில் பாதைகளை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் “பயணிகள் முன்பதிவு அமைப்பின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஹார்டுவேர், மென்பொருள் மற்றும் இணையதள […]