ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) பட்டதாரிகளுக்கு மத்திய ஆயுதப்படைகள் (CAPF) மற்றும் டெல்லி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (SI) பதவிகளில் பணியிடங்களை அறிவித்துள்ளது. மொத்தமாக 3,073 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிடங்களின் விவரம்:
டெல்லி காவல்துறை SI: ஆண்கள் – 142 இடங்கள், பெண்கள் – 70 இடங்கள்
மத்திய ஆயுத படைகள்: 2,861 இடங்கள்
மொத்தம்: 3,073 பணியிடங்கள்
கல்வி தகுதி: விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை (Graduation) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 2-8-2000-க்கு முன்போ அல்லது 1-8-2005-க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது. இருப்பினும், அரசு விதிமுறைகளின்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு அவர்களின் பிரிவைப் பொறுத்து 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணியாளர் தேர்வு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (CBE), அதைத் தொடர்ந்து உடல் திறன் தேர்வு (Physical Endurance Test – PET), மற்றும் இறுதியாக மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கரூர், வேலூர், புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை: இந்த மத்திய அரசு பணி வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள், ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssc.gov.in/ என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 16-10-2025 ஆகும்.



