தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3,665 காலிப்பணியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 3,665 காலிப்பணியிடங்கள் கொண்ட இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பானது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 03.09.2025 முதல் துவங்கப்பட்டு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது.
மேலும் 8 இலவச மாதிரி தேர்வுகள் முறையாக திட்டமிடப்பட்டு 12.09.2025 அன்று தொடங்கப்பட்டு வாரந்தோறும் மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளன. இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இவ்வலுவலகத்தில் பள்ளிப் பாடபுத்தகங்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச Wi-Fi மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதி போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே, இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://shorturl.at/B33H9 என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலகத்தை நேரிலோ அல்லது இவ்வலுவலக தொலைபேசி எண் 04342-288890 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.



