தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி. வேலுமணி – சி.வி சண்முகம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டது.. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி இபிஎஸ் அணியில் இணைந்து ஒரே அணியாக செயல்பட தொடங்கி உள்ளனர்.. எனினும் சி.வி. சண்முகம் மட்டும் இபிஎஸ் உடன் இணையவில்லை.. அவருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது..
இதனிடையே மதுராந்தகம், பெருந்துரை, தாராபுரம், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.. அதிமுக நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது..
இந்த நிலையில் அதிமுகவின் 4 முக்கிய முன்னாள் அமைச்சர்கள் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.. அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனன் முறையில் இன்று தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி. சம்பத், எம்.எஸ்.எம். ஆனந்தன், கடம்பூர் ராஜு ஆகியோர் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்..
அதிமுகவின் முந்தைய ஆட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வீட்டுவசதி அமைச்சராகப் பொறுப்பு வகித்த டுமலை ராதாகிருஷ்ணன் இன்று தவெகவில் இணைந்தார்.. இவர் திருப்பூர் மாவட்ட அதிமுகவின் முக்கியத் தூணாக விளங்கியவர்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் மூத்த தலைவர் எம்.சி.சம்பத் எம்.சி.சம்பத் இன்று தவெகவில் இணைந்தார்… முந்தைய ஆட்சியில் வணிகவரி மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு முக்கிய மூத்த தலைவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் . அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் ஆவார்..
தென் மாவட்டமான தூத்துக்குடி கோவில்பட்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மற்றும் முந்தைய அதிமுக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர் கடம்பூர் ராஜூ..
அமைச்சர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் தங்களுக்கு எனத் தனி வாக்கு வங்கியை வைத்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று தவெகவில் இணைந்தனர்.. அதன்படி கோவிந்தசாமி, சுந்தரராஜூ, ராஜமுத்து, மான்ராஜ், பன்னீர்செல்வம், ராஜவர்மன் (சாத்தூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ), வி.கே.ஆர்.சீனிவாசன் என 7 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.



