தருமபுரி மாவட்டம், பெங்களூர்–சேலம் தேசிய நெடுஞ்சாலை 47-ல் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கார் மற்றும் பைக் மீது லாரி வேகமாக மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. லாரியின் பிரேக் பெயிலியர் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக தொப்பூர் கணவாய் பகுதியில் நீண்ட நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று மீட்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து விபத்துகள் நடைபெறும் அபாயப் பகுதியாக தொப்பூர் கணவாய் கருதப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறையின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 11 ஆண்டுகளில் இப்பகுதியில் 961 விபத்துகள் பதிவாகியுள்ளன. கணக்கில் எடுக்கப்படாத சிறிய விபத்துகளும் இதில் அடங்கும். கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 255 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக லாரிகளில் பயன்படுத்தப்படும் ஏர் பிரேக் அமைப்பு இந்த சரிவான சாலையில் வேகமாக இயக்கினாலும், மெதுவாக பிரேக் பிடித்தபடியே இயக்கினாலும், பிரஷர் குறைந்து பிரேக் பெயிலியர் ஏற்படும் அபாயம் அதிகம் என லாரி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே இங்கு நடந்த விபத்துகளில் சுமார் 90 சதவீதத்திற்கும் காரணம் என கூறப்படுகிறது.
Read more: குளிர்காலத்தில் பைக் மற்றும் கார்களின் மைலேஜ் குறைவது ஏன்..? தடுக்க என்ன செய்ய வேண்டும்..?



