சென்னை ஆவடி அருகே வீட்டில் வைத்து இருந்த நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சுனில், பிரகாஷ், கிரி மற்றும் யாசின் ஆகியோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு படையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இந்த வீட்டில் நாட்டு வெடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டதா அல்லது வெடிக்க வைத்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் வீடு இடிந்து தரைமட்டமானது. அருகில் உள்ள வீடுகளில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், நாளை கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு முன் பெரும் அதிர்ச்சியாக உள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் விழாவை முன்னிட்டு பாதுகாப்பாக நடத்தியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.
Read more: கரூர் மக்களே விஜய்க்கு தான் ஆதரவு.. அவர் வீட்டுக்குள்ளே முடங்கி விடக்கூடாது..!! – நடிகை கஸ்தூரி



