ஆடிப் பெருக்கு எனும் ஆடி பதினெட்டு விழா மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், எந்த திதியில் வந்தாலும் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். இயற்கை சக்திகளில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் தரப்படும் கிரகம் சந்திரன். காலச்சக்கரத்தின் நான்காவது ராசி அதிபதி சந்திரனுக்கு சொத்து, சுகம், வண்டி, வாகனங்கள் முதலியவற்றை தருகின்ற அதிகாரம் உண்டு. சந்திரன் மனோகாரகன் அதாவது மனதை ஆள்பவன்.
சந்திரன் சுப கிரகங்களுடன் சேரும் போது யோகமாகவும், அதுவே ராகு-கேது, சனி போன்ற கிர கங்களுடன் சேரும் போதும் அவயோக தோஷமாகவும் மாறுகிறது. சந்திரன் தரும் யோகங்கள் ஒருவரை வாழ்க்கையில் உச்சத்தை அடைய வைக்கும். வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சந்திரனால் யோகம் இருந்தால் அந்த குழந்தையின் ஜாதகத்தால் அந்த குடும்பம் செல்வ வளத்துடன் கூடிய கோடீஸ்வரர் குடும்பமாக மாறிவிடும். அந்தளவுக்கு யோகத்தை வழங்ககூடிய அமைப்பு சந்திரனுக்கு உண்டு. சந்திரனால் பாதிக்கப்பட்டால் வறுமை தண்ணீரில் கண்டம்,திருமணதடை, தோல்விகள், மனநிலை பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.
கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும். இந்தநிலையில் இம்மாதம் சூரியன் கடகம் ராசியிலிருக்கும். ஆதலால்தான் நீர்நிலைகள் வழிபாடு இம்மாதத்தில் போற்றப்படுகிறது. இந்தநிலையில் 12 ராசிகளில் கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை நீர் ராசிகள் ஆகும். இந்த 3 ராசிகளோடு சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசி ஆகிய 4 ராசிகாரர்களும் ஆடி 18 அன்று வழிபாடு செய்தால் அபரிமிதமான பலன்களை பெறலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
ஆடி மாதத்தில் தென் மேற்குப் பருவ மழை பெய்து காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதைத்தான் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள்.தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். அனைத்து நதிகளும் நீர் நிரம்பி காணப்படும்.
Readmore: கூலி ஆடியோ வெளியீட்டு விழா!. அஜித் டயலாக்கைப் பேசிய ரஜினி!. அரங்கமே அதிர்ந்த தரமான சம்பவம்!