HeadPhone பயன்பாட்டால் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு – WHO அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகம் முழுவதும் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

HeadPhone: இன்றைய நவீன உலகில் ஹெட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சிறியோர் முதல் பெரியோர் வரை ஹெட்போனை பயன்படுத்துகின்றனர். இப்போதெல்லாம் விதவிதமான மாடல்களில் ஹெட்போன்கள் வந்துவிட்டன. வீட்டில் இருக்கும்போதும் சரி, பைக்கில் செல்லும்போதும் சரி ஹெட்போட்டு பாடல் கேட்டால்தான் சிலருக்கு அந்த நாளே சிறப்பானதாக இருக்கும். அந்த அளவிற்கு ஹெட்போன் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஹெட்போன்களை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், எந்த அளவிற்கு எவ்வளவு சத்ததுடன் பயன்படுக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. இதுதொடர்பாகதான் தற்போது உலக சுகாதார நிறுவனம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில், உலக அளவில் 40 கோடி பேருக்கு செவித்திறன் பாதிப்பு உள்ளதகாவும், இவர்களில் 20 சதவீதம் பேரிடம் மட்டுமே காது கேட்கும் கருவிகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2050ஆம் ஆண்டில் 250 கோடி பேருக்கு ஏதாவது ஒரு வகையான செவித் திறன் பாதிப்பு இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலையும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.ஹெட்போன்கள் மூலம் சத்தமான இசை கேட்பதால் 100 கோடி இளைஞர்கள், நிரந்தர செவித்திறன் இழப்பை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளதாகவும் WHO எச்சரித்துள்ளது.

Baskar

Next Post

சிறையில் கொடுமை!... பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றச்சாட்டு!

Sun Apr 21 , 2024
Imran Khan: தனது மனைவி புஸ்ரா பீவிக்கு சிறையில் அளிக்கப்பட்ட உணவில், கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவம் கலந்திருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். அந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக இம்ரான்கான் மற்றும் […]

You May Like