நியூயார்க்கில் 43வது இந்திய தின அணிவகுப்பு!. சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா!. ரசிகர்கள் ஆர்வம்!

43rd annual India day 11zon

நியூயார்க் நகரத்தில் நடைபெற உள்ள 43வது இந்திய தின( India Day Parade) அணிவகுப்பில் பாலிவுட் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் Co-Grand Marshals கலந்துகொண்டு வழிநடத்தவுள்ளனர்.


அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மாடிசன் அவென்யூவில் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி 43வது இந்திய தின அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான அணிவகுப்பை நடத்தவுள்ள பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் கலந்துகொண்டு அணிவகுப்பை வழிநடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நிகழ்ச்சியின் கருப்பொருள் என்னவென்றால் ‘சர்வே பவந்து சுகின:’ (எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்) என்பதாகும். உலகளாவிய அரசியல் மோதல்களுக்கு மத்தியில் அமைதிக்கான அழைப்பை முன்வைப்பதே இதன் நோக்கம் என்று FIA தலைவர் சௌரின் பாரிக் கூறியுள்ளார்.

இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (FIA-NY-NJ-CT-NE) சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 43வது ஆண்டு இந்திய தின அணிவகுப்புக்கான அட்டவணையை அறிவித்தது. நிகழ்வில் பேசிய நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதர் பினயா எஸ். பிரதான், அரை நூற்றாண்டு கால, இந்திய சங்கங்களின் கூட்டமைப்பை பாராட்டினார். அதாவது, அமெரிக்காவில் இந்தியாவின் பிம்பத்தை மேம்படுத்துவதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளதாக கூறினார்.

1981 ஆம் ஆண்டு ஒரு எளிய அணிவகுப்பாக நடைபெற்ற இந்த அணிவகுப்பு, இப்போது உலகின் மிகப்பெரிய இந்தியா டே கொண்டாட்டமாக மீடியாவில் புகழப்படுவது வரை வளர்ச்சியடைந்துள்ளது.” 1970 இல் நிறுவப்பட்ட இந்திய கூட்டமைப்பு, இந்திய கலாச்சாரம், சமூக ஈடுபாடு மற்றும் இந்தியா-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாட்டங்கள் தொடங்கும். அன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடம் மூவர்ணத்தில் ஒளிரும். 16 ஆம் தேதி டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்படும். அணிவகுப்பின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் போட்டியும் நடைபெறும்.

17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மாடிசன் அவென்யூவில் அணிவகுப்பு தொடங்கும். இஸ்கான் நியூயார்க் நடத்தும் தேர் திருவிழாவும் இதனுடன் இணைந்து நடைபெறும். சிப்ரியானி வால் ஸ்ட்ரீட்டில் நடைபெறும் நிகழ்வுடன் கொண்டாட்டங்கள் நிறைவடையும். அடுத்த ஒரு வருடத்தில் கிரிக்கெட்டை அமெரிக்காவின் பிரதான விளையாட்டாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்று நிகழ்ச்சியின் முக்கிய ஸ்பான்சரான கிரிக்மேக்ஸ் கனெக்ட் தெரிவித்துள்ளது.

Readmore: சனி தோஷத்தால் அவதியா..? நீங்கள் செல்ல வேண்டிய கோவில் இதுதான்..!!

KOKILA

Next Post

நோட்!. இந்த வாரத்தில் வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை!. எந்த மாநிலம்,எந்தெந்த தேதிகள்? முழுவிபரம்

Thu Aug 14 , 2025
இந்த வாரத்தில் வங்கியில் செய்ய வேண்டிய வேலைகள் இருந்தால், கவனமாக இருங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கு செல்லும் முன், எந்த நாட்களில் மற்றும் எந்த மாநிலங்களில் விடுமுறை உள்ளது என்பதை சரிபார்த்து செல்வது முக்கியம். இந்த ஆகஸ்ட் வாரம் விடுமுறைகளால் நிரம்பியுள்ளது . அதிலும் சில இடங்களில் மூன்று நாள் தொடர் வங்கி விடுமுறை இருக்கிறது. எனவே உங்கள் வங்கி […]
bank holiday 1

You May Like