கூட்டுறவு சங்கங்களில் 481 உதவியாளர் பணியிடங்கள்…! அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…!

Tn Govt 2025

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 481 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.


இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாநில ஆள்சேர்ப்பு நிலையம் சென்னை (ம) கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் தருமபுரி அவர்களால் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 481 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு. தேர்வு நடத்த அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 15.09.2025 அன்று துவங்கப்பட்டு, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வாரந்தோறும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்த தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (ம) கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் இவ்வலுவலகத்தில் பள்ளிப் பாடபுத்தகங்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய இலவச நூலக வசதி, இலவச Wi-Fi மற்றும் இலவச கணினி பயன்படுத்தும் வசதி போன்ற தேர்வர்கள் பயன்பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன.

எனவே, இப்பயிற்சி வகுப்பில் விருப்பம் உள்ளவர்கள் சேர https://shorturl.at/wsLm5 என்ற இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலகத்தை நேரிலோ அல்லது இவ்வலுவலக தொலைபேசி எண் 04342-288890 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதி வாய்ந்த தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஆஸ்திரேலியாவில் மல்லிகை.. அமெரிக்காவில் கிண்டர் ஜாய்.. உலக நாடுகளில் தடை விதிக்கப்பட்ட பொருட்கள் என்னென்ன தெரியுமா..?

Sun Sep 14 , 2025
Jasmine in Australia.. Kinder Joy in America.. Do you know what products are banned in countries around the world..?
Biosecurity rules 2

You May Like