கோவை வெடிவிபத்தில் 5 பேர் கைது… பலத்த பாதுகாப்பு..

கோவை வெடிவிபத்தில் இதுவரை 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகரத்தில் உக்கடம் பகுதியில் சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேசா முபின் (29) என்பவர் உயிரிழந்தார்.
இவரது வீட்டை சோதனை நடத்தியதில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதே போல உயிரிழநு்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து சில மர்மமான பொருட்களை கொண்டு செல்லும் சி.சி.டி.வி காட்சிகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகரம் உக்கடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
இந்த விவகாரத்தில் உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகரை சேர்ந்த முகமது ரியாஸ் (27) , ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் அந்த மர்ம பொருட்கள் , நாட்டு வெடிகுண்டு மூலப் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடலை கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது உதவி ஆணையர் தங்கப்பாண்டி தலைமையில் போலீசார் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்தனர்.
பிரேத பரிசோதனையின் போது 13 உடல் பாகங்கள் எடுக்கப்பட்டு மேல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அவரது மனைவி நஸ்ரத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஜமேசாவின் உறவினர்கள் அவரது உடலை வடகோவையில் அடக்கம் செய்யபட்டது.
இந்த சூழலில் இந்த வெடி விபத்தின் எதிரொலியாக கோவை மாநகரில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் கோவையில் முகாமிட்டு விசாரணை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு டிஐஜி மற்றும் எட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளர், 10 மாவட்ட காவலர்களுடன் இணைந்து 240 மத்திய அதிவிரைவு படையினர் ( Rapid action force) என சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அதிவிரைவு படையினர் கோவை உக்கடம் மற்றும் கண்ணப்பன் நகர் பகுதிகளில் இரண்டு குழுக்களாக பிரிந்து வஜ்ரா வாகனங்களுடன் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மக்கள் அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களிலும் டவுன்ஹால், உக்கடம், கோட்டைமேடு மற்றும் கரும்புக்கடை போன்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Post

280 இடங்களில் பற்றி எரிந்த தீ..!! பதறிய தமிழ்நாடு..!! பரபரப்பில் தீயணைப்புத்துறை..!!

Tue Oct 25 , 2022
தீபாவளியான நேற்று தமிழ்நாடு முழுவதும் 280 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், தீபாவளி பண்டிகையன்று, பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகளை விரைந்து கையாளும் வகையில் தமிழகத்தில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில் 6,673 வீரர்கள் தயார் நிலையில் இருந்து பெரிய தீவிபத்து சம்பவங்களை […]
280 இடங்களில் பற்றி எரிந்த தீ..!! பதறிய தமிழ்நாடு..!! பரபரப்பில் தீயணைப்புத்துறை..!!

You May Like